இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களில் 3 முக்கியமான வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றார். கடந்த வாரம் ரோஹித் சர்மா விடை பெற்றார். இந்த வரிசையில் தற்போது விராட் கோலியும் இணைந்துள்ளார்.
விராட் கோலி 14 ஆண்டுகால தனது புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 123 போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார். 30 சதங்கள், 31 அரை சதங்கள் விளாசியுள்ளார்.