சேவக் சர்டிபிகேட்
பெங்களூரு
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக கடந்த 7 வருடங்களாக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை, அந்த அணி நிர்வாகம் இம்முறை கழற்றிவிட்டிருந்தது. இதனால் அவர், நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆர்சிபி அணிக்கு எதிராக அதிலும் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் முகமது சிராஜ் மிரட்டி விட்டார்.

4 ஓவர்களை வீசிய அவர், 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அபாயகரமான வீரர் பில் சால்ட் (14), தேவ்தத் படிக்கல் (4), லியாம் லிவிங்ஸ்டன் (54) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். சிராஜின் பந்து வீச்சால் பெங்களூரு அணி 169 ரன்களுக்குள் அடக்கப்பட்டது. இதன் பின்னர் இலக்கை துரத்திய குஜராத் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான சேவக் கூறும்போது, “முகமது சிராஜிடம் நெருப்பு இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறாதது குறித்து அவர், வருத்தப்படுகிறார் என்று நான் எங்கோ உணர்கிறேன், அந்த நெருப்பை நான் பார்த்தேன். ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடம் இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். “நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கலையா? இப்போது காட்டுகிறேன்” என்ற தோரணையில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் இதே தீவிரத்துடன் தொடர்ந்து விளையாடி இந்திய அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்” என்றார்.

What’s up, found 992bet77 randomly browsing. It’s alright. See if it clicks with you! 992bet77
Alright, folks, checking out tylecacuoc188bet! Heard they got some decent odds. Gotta see for myself if the hype is real. Fingers crossed for those winning bets! tylecacuoc188bet
Codesunwin on the .net …Alright, I’m on the hunt for some sweet codes! Hope they got the good stuff and that I can actually win somethin’! codesunwin