உலகக் கோப்பை வில்வித்தையில் வெண்கலம் வென்றது இந்திய அணி

உபர்ந்தேல்

அமெரிக்காவில் உள்ள உபர்ந்தேல் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 1 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அபிஷேக் வர்மா, ஓஜாஸ் டியோடலே, ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் டென்மார்க் அணியை 230-223 என்ற கணக்கில் தோற்கடித்தது.

ஒலிம்பிக்கில்….

முன்னதாக, வரும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் வில்வித்தை பிரிவில் கலப்பு அணிகள் பிரிவு இடம் பெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய அணி காம்பவுண்ட் பிரிவில் உலகக் கோப்பையில் பதக்கம் பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top