தோனியின் காலில் விழுந்த சூர்யவன்ஷி !

புதுடெல்லி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

188 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 17 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது. 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 33 பந்துகளில் 57 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

போட்டி முடிந்தபிறகு ஒவ்வொரு வீரரும் கை குலுக்கும்போது வைபவ் சூர்யவன்ஷி சிஎஸ்கே கேப்டன் தோனியின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். தோனி அவரது கையைப் பிடித்து சிரித்தபடியே பாராட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top