கொல்கத்தா
ஐபிஎல் டி 20 தொடரில் நடப்பு சாம்பியனான அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள கேகேஆர் 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவு இல்லாத ஆட்டம் என 12 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரோவ்மன் பொவல், டான்ஸில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த லெக் ஸ்பின்னரான ஷிவம் சுக்லாவை ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது கேகேஆர் அணி. கேகேஆர் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 25-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.