சொல்கிறார் வழிகாட்டி டுவைன் பிராவோ
கொல்கத்தா மார்ச் 15
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனுக்காக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் டைர்டர்ஸ் அணி ஈடன் கார்டன் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த சீசனில் அந்த அணியின் வழிகாட்டியாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் இந்த பணியை கவுதம் காம்பீர் மேற்கொண்டிருந்தார். அவரது வழிகாட்டலில் கேகேஆர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருந்தது. இதனால் இம்முறை டுவைன் பிராவோ என்ன செய்ய போகிறார் என்பதை காண அந்த அணியின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் டுவைன் பிராவோ கூறும்போது, “இந்த சீசனில் துரதிருஷ்டவசமாக சில வீரர்களை இழந்துள்ளோம். கவுதம் காம்பீருக்கு என்று தனி ஸ்டைல் இருந்தது. எனக்கென தனி பாணி இருக்கிறது. நாங்கள் இருவரும் எங்கள் சொந்த வழியில் வெற்றி பெற்றுள்ளோம். கவுதம் காம்பீருக்கு சில முறை மெசேஜ் அனுப்பினேன்.
இந்த அணி வெற்றிக்கான மந்திரத்தை கொண்டுள்ளது. அந்த ஃபார்முலாவை பின்பற்றுவது முக்கியம். கடந்த சீசனில் செய்த நல்ல விஷயங்களை கண்டறிந்து அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியை வீரர்கள் எடுக்காவிட்டால் என்னை அவமதிப்பதாக உணர்வேன்.
இவ்வாறு டுவைன் பிராவோ கூறினார்.

