ஜூன் 15-ல் ரக்பி பிரிமியர் லீக் தொடக்கம்

சென்னை

ரக்பி பிரிமியர் லீக்கின் முதல் சீசன் மும்பையில் வருகி 15-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, ஒடிசா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரக்பி பிரிமியர் லீக்கில் பங்கேற்கும் சென்னை புல்ஸ் அணியின் ஜெர்சி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது.

விழாவில் ரக்பி இந்தியாவின் பொருளாளர் செந்தில் வி.தியாகராஜன், இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜூனா, நடிகரும், முன்னாள் ரக்பி வீரருமான வினய் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆதவ் அர்ஜூனா கூறும்போது, “இங்கிலாந்தில் முதலில் விளையாடப்பட்ட கிரிக்கெட் விளையாட்டின் அடித்தளம் நம் மண்ணில் தான் தொடங்கியது. கபடி, கால்பந்து, கூடைப்பந்து என அனைத்துக்குமான அடித்தளமும் இங்கு தான் தொடங்கியது. நிச்சயமாக ரக்பி லீக் தொடருக்கு வெற்றி கிடைக்கும்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top