சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 200 ரன் இலக்கு வைக்க விரும்பினோம்

ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் உற்சாகம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆர்சிபி 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சென்னை சேப்பாக்கத்தில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பெற்ற முதல் வெற்றி குறித்து ஆட்ட நாயகன் ரஜத் படிதார் அளித்த பேட்டி:

சென்னை மைதானத்தில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடிப்பது பேட்டர்களுக்கு எளிதானது அல்ல, ஏனெனில் பந்து மிகவும் மெதுவாக வந்தது. இந்த பிட்சில் இது ஒரு நல்ல ஸ்கோர்.

நான் இருக்கும் வரை ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

சென்னையில் ஆடுவது எனக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில் இங்குள்ள ரசிகர்கள் மிகவும் உற்சாகப்படுத்துவார்கள்.

முதலில் பேட் செய்ய களம் இறங்கிய போது எங்கள் இலக்கு 200ஆக இருந்தது. அந்த ஸ்கோரை எடுப்பது இந்த பிட்ச்சில் மிகவும் கடினம் என்பது எங்களுக்கு தெரியும்.

இந்த பிட்ச் ஸ்பின்னர்களுக்கு உதவும் என்பதால் அவர்களை முன்கூட்டியே பயன்படுத்த வேண்டும்என்பதையும் மனதில் வைத்து இருந்தேன்.

லிவிங்ஸ்டன் மிகச்சிறப்பாக பந்து வீசினார். ஹேசல்வுட்டும் அவருடன் இணைந்து முதல் ஆறு ஓவர்களில் இரண்டு-மூன்று விக்கெட்டுகளை அவர்கள் வீழ்த்தியதால் எங்கள் வெற்றி எளிதானது.

ஏனென்றால் இந்த பிட்சில் பந்து மட்டைக்கு எளிதாக வரவில்லை. இவ்வாறு கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top