பாட்மிண்டனில் பி.வி.சிந்து தோல்வி

கோலாலம்பூர்

மலேசியா பாட்மிண்டன் தொடரில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய் 19-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கென்டா நிஷிமோடாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்றது.

மற்ற இந்திய வீரர்களான சதீஷ் குமார் கருணாகரன் 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் டியன் செனையும், ஆயுஷ் ஷெட்டி 20-22, 21-10, 21-8 என்ற கணக்கில் கனடாவின் பிரையன் யங்கையும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 23-21, 13-21, 21-11 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் லூ குவாங் ஸுவையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் வியட்நாமை சேர்ந்த நுயென் துய் லின்னுடன் மோதினார். இதில் சிநது 11-21, 21-14, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top