Prabhsimran Singh 2

37 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்

பிரப்சிம்ரன் ஆட்ட நாயகன் * பதோனி போராட்டம் வேஸ்ட்

தரம்சாலா: ஐபிஎல் 18வது சீசன் 54வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

Prabhsimran Singh 2

இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற எல்எஸ்ஜி முதலில் பந்துவீச… பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன் குவித்தது. தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிகபட்சமாக 91 ரன் (48 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார்.

ஜோஷ் இங்லிஸ் 30 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ஷ்ரேயாஸ் 45 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), நெஹல் வதேரா 16 ரன் (9 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

ஷஷாங்க் சிங் 33 ரன் (15 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டாய்னிஸ் 15 ரன்னுடன் (5 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் ஆகாஷ் சிங், திக்வேஷ் ரதி தலா 2, பிரின்ஸ் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 20 ஓவரில் 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் துரத்தலை தொடங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன் மட்டுமே எடுத்து 37 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Arshdeep 2

ஆயுஷ் பதோனி அதிகபட்சமாக 74 ரன் (40 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), அப்துல் சமத் 45 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரிஷப் பண்ட் 18, மார்க்ரம் 13, மில்லர் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆவேஷ் கான் 19 ரன், பிரின்ஸ் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அஸ்மதுல்லா 2, யான்சென், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பிரப்சிம்ரன் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறிய நிலையில் (15 புள்ளி), லக்னோ (10 புள்ளி) 7வது இடத்தில் பின் தங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top