ஜேக்கப் டபி

அடிமேல் அடி வாங்கும் பாகிஸ்தான் அணி😔

கிறைஸ்ட்சர்ச்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று (மார்ச் 16) நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 91 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக குஷ்தில் ஷா 32, கேப்டன் சல்மான் ஆகா 18, ஜகன்தத் கான் 17 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கை ரன்னை தொடவில்லை. தொடக்க வீரர்களான முகமமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் ஆகியோர் முதல் 8 பந்துகளுக்குள்ளே ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர்.

தொடர்ந்து இர்பான் கான் 1, ஷதப் கான் 3 ரன்களில் நடைய கட்ட 4.4 ஓவர்களில் 11 ரன்களுக்கு 4 விக்கெட்களை தாரை வார்த்த பாகிஸ்தான் அணியால் அதன் பின்னர் மீள முடியாமல் போனது. நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி 4, கைல் ஜேமிசன் 3, இஷ் சோதி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதில் ஜேமிசன் 18 டாட் பால்களை வீசியிருந்தார். எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

கைல் ஜேமிசன் 5

ஃபின் ஆலன் 29, டிம் ராபின்சன் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 18-ம் தேதி டூனிடின் நகரில் நடைபெறுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் படுதோல்வி அடைந்து லீக் சுற்றுடன் பாகிஸ்தான் மூட்டை கட்டியிருந்தது. இந்த தோல்வியால் அணியின் மூத்த வீரர்களான முகமது ரிஸ்வான், பாபர் அஸம் ஆகியோர் நியூஸிலாந்து தொடரில் நீக்கப்பட்டனர்.

புதிய கேப்டனாக சல்மான் ஆகா தலைமையின் கீழ் களமிறங்கிய இளம் வீரர்கள் பெரிய ஓபனிங் கொடுக்க வேண்டிய இடத்தில் சறுக்கியுள்ளனர். கைல் ஜேமிசன், ஜேக்கப் ஃடபி ஆகியோரது வேகத்தையும், ஸ்விங்கையும் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒட்டுமொத்த அணியும் சீட்டு கட்டு போல் சரிந்து படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

நியூஸிலாந்து மண்ணில் பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்ன் 2016-ல் 101 ரன்களுக்கும், 2018-ல் 105 ரன்களுக்கும் பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top