இரண்டாம் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
பாபர் அசாம், ரிஸ்வான் இல்லாமல் டி20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. முதல் டி20 போட்டியில் 96 ரன்னில் சுருண்டு பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.
இரண்டாவது டி20 யில் பாகிஸ்தான் முதலில் பேட்செய்தது.15 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன் மட்டுமே எடுத்தது.

கேப்டன் சல்மான் ஆகா 46 ரன், சதாப் கான் 26 ரன், ஷாஹீன் அப்ரிடி 22 ரன் எடுத்தனர். அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி 13.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வென்றது.
டிம் சைபர் 45 ரன்,பின் ஆலன் 38 ரன், மிச்சல் கே 21 ரன் எடுத்தனர். மூன்றாவதுடி20 வரும் 21ஆம் தேதி ஆக்லாந்தில் நடக்கிறது