நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டி ஒத்திவைப்பு

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் மூலமாக இந்தியா தனது பதிலடியைக் கொடுத்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் 24ம் தேதி பெங்களூருவில் நடைபெற இருந்த நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 2016 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தாமஸ் ரோஹ்லர் போன்ற நட்சத்திரங்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top