ஐசிசி ஆடவருக்கான 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நமீபியா அணி குறித்த ஓர் பார்வை..
நமீபியா அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் களமிறங்குகிறது. அந்த அணி அதிகபட்சமாக அறிமுகமான 2021-ம் ஆண்டு சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருந்தது. அப்போது அந்த அணி நெதர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது. இம்முறையும் இந்த இரு அணிகளும் லீக் சுற்றில் நேருக்கு நேர் சந்திக்க உள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா தனது முதல் ஆட்டத்தில் ஓமன் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. அந்தப் போட்டியில் ரூபன் ட்ரம்பெல்மேன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். முன்னாள் வீரரான 41 வயதான கிரெய்க் வில்லியம்ஸ் அந்த அணியின் பயிற்சியாளராக மாறி உள்ளார்.
நமீபியா அணி இதற்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோதி உள்ளன. இதில் அந்த அணி தோல்விகளையே சந்தித்துள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு எதிராக 2 முறையும் அந்த அணி தோல்வி கண்டுள்ளது.
அணி விவரம்:
ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (சி), ஜேன் கிரீன், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ், ரூபன் ட்ரம்பெல்மேன், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃப்ரைலின்க், லூரன் ஸ்டீன்காம்ப், மாலன் க்ரூகர், நிகோல் லோஃப்டி-ஈடன், ஜாக் ப்ராஸ்செல், பென் ஷிகோங்கோ, ஜேசி பால்ட், டிலான் லீச்சர், டபிள்யூபி ஹெரிங்பர்க், மேக்ஸ்பி ஹெரிங்பர்க். ரிசர்வ்: அலெக்சாண்டர் வோல்சென்க்.
மோதல் விவரம்:


