mukesh

முகேஷ் குமாருக்கு அபராதம்

 மும்பை

 ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த தோல்வியால் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

 
இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் பேட்டிங்கின் போது 19-வது ஓவரை வீசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார்  27 ரன்களை தாரை வார்த்தார். இந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முகேஷ் குமார் ஐபிஎல் நன்னடத்தை விதியை மீறியதாக அவருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top