சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் வரலாற்றில் 100 வெற்றிகளுக்கு மேல் குவித்த அணிகளின் விவரம்:
🏏 மும்பை இந்தியன்ஸ் அணி 246 போட்டிகளில் விளையாடி 144-ல் வெற்றி பெற்றுள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
🏏 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 239 போட்டிகளில் விளையாடி 139 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
🏏 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 252 போட்டிகளில் பங்கேற்று 133 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
🏏 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 256 போட்டிகளில் 123-ல் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை அந்த அணி ஒருமுறை பட்டத்தை வெல்லவில்லை.

🏏 டெல்லி கேபிடல்ஸ் 252 போட்டிகளில் விளையாடி 115 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒருமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அந்த அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை.
🏏 பஞ்சாப் கிங்ஸ் 246 போட்டிகளில் விளையாடி 112-ல் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை கோப்பையை வெல்லாத அந்த அணி 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தை பிடித்திருந்தது.
🏏 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 222 போட்டிகளில் விளையாடி 111 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிமுக சீசனில் பட்டம் வென்றிருந்தது.