meera

தங்கம் வென்றார் இந்தியாவின் மீராபாய் சானு

அகமதாபாத்

இந்தியாவின் மீராபாய் சானு, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார். அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், மொத்தம் 193 கிலோ (ஸ்நாட்ச்சில் 84 கிலோ + கிளீன்ட் அன்ட் ஜெர்க்கில் 109 கிலோ) எடையை தூக்கி காமன்வெல்த் சாம்பியன்ஷிப் சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

மலேசியாவை சேர்ந்த ஐரீன் ஹென்றி வெள்ளியும், வேல்ஸை சேர்ந்த நிக்கோல் ராபர்ட்ஸ் வெண்கலமும் வென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top