மியாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதியில் மென்சிக் முன்னேற்றம்

அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, அமெரிக்காவின் பெகுலா ஆகியோர் விளையாட உள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு செர்பிய வீரர் ஜெகோவிச் முன்னேறினார். அடுத்த அரை இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 54வது இடத்தில் உள்ள செக்குடியரசின் மென்சிக் மற்றும் உலகின் 3ம் நிலை வீரர் பிரிட்ஸ் மோதினர்.

இந்த போட்டியில் செக் நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஜக்குப் மென்சிக் 7-6 (7/4), 4-6, 7-6 (7/4) என்ற கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் மென்சிக், முன்னணி வீரர் ஜெகோவிச்சை எதிர்கொள்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top