துபாய்
மகளிர் டி 20 கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா ஆகியோர் 3-வது இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மந்தனாவை தவிர மற்ற இந்திய வீராங்கனைகள் யாரும் டாப் 10-ல் இடம் பெறவில்லை. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 11-வது இடத்தில் உள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15-வது இடத்திலும், ஷபாலி வர்மா 16-வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், தஹ்லியா மெக்ராத் 2-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசயில் இந்தியாவின் தீப்தி சர்மா 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன், பாகிஸ்தானின் சாடியா இக்பால் ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.