மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் அரை இறுதி தொடரில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர்

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 65-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 18-ம் நிலை வீரரான பிரான்ஸின் டோமா ஜூனியர் போபோவை எதிர்கொண்டார்.

ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 24-22, 17-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரை இறுதியில் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுஷி தனகாவுடன் மோதுகிறார். கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 22-24, 13-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜியாங் ஷென் பாங், வெய் யா ஷின் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top