6 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர்

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் உலகத் தரவரிசையில் 65-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 23-வது இடத்தில் உள்ள ஜப்பானின் யுஷி தனகாவுடன் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

சர்வதேச பாட்மிண்டன் தொடரில் ஸ்ரீகாந்த் 6 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளார். கடைசியாக அவர், 2019-ம் ஆண்டு இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் 2-வது இடம் பிடித்திருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top