இத்தாலி டென்னிஸில் ஜாஸ்மின் பவுலினி அசத்தல் 

ரோம் 

இத்தாலின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, 13-ம் நிலை வீராங்கனயைன ரஷ்யாவின் டயானா ஸ்னைடருடன் மோதினார். 

இதில் பவுலினி 6-7 (1-7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் 11 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பவுலினி பெற்றார்.

WhatsApp Image 2025 05 14 at 6.23.32 PM 2

இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு சாரா எரானி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 2-6, 6-4, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸிடம் தோல்வி அடைந்தார்.

https://twitter.com/Since1990_F/status/1922305673745899884?t=8EUOgNYsjqn8QM3YWQ9MqA&s=19

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top