நார்வேயின் காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி
பாரிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜாஸ்மின் பவுலினி, கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 8-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டி 6-4, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
7-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-2, 4-6, 1-6, 0-6 என்ற செட் கணக்கில் 41-ம் நிலை வீரரான போர்ச்சுகலின் நுனோ போர்கஸிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் 56-ம் நிலை வீரரான ஹங்கேரியின் ஃபேபியன் மரோசானை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்ல்ஜனோவிக்கை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.
8-ம் நிலை வீராங்கனையான சீனாவின் செங் குயின்வென் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் எமிலியானா அரங்கோவையும், 16-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிசிமோவா 6-0, 6-2 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் விக்டோரிஜா கோலுபிக்கையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.