Jannik Sinner

இத்தாலி டென்னிஸ்: காலிறுதியில் ஜன்னிக் சின்னர் !

ரோம்

 இத்தாலின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் 23-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவையும், 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஆர்தர் பில்ஸையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர்.

 10-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மேத்வதேவ் 5-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் 8-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டியிடம் தோல்வி அடைந்தார். 5-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜேக் டிராப்பர் 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கோரன்டின் மவுட்டை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top