ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு ஈரான் அணி தகுதி

டெஹ்ரான்:

2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. இம்முறை 48 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதற்கான தகுதி சுற்று போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டியில் ‘ஏ’ பிரிவில் உள்ள ஈரான் – உஸ்பெகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் டெஹ்ரானில் நடைபெற்றது.

இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஈரான் அணி தரப்பில் மெஹ்தி தரேமி 2 கோல்கள் (52, 83-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். இதன் மூலம் ஈரான் அணி தனது பிரிவில் 20 புள்ளிளுடன் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top