IPL trophy

மே 17-ல் ஐபிஎல் மீண்டும் தொடக்கம்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் தொடரில் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் 10.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் புறப்பட்டுச் சென்றனர். இந்திய வீரர்களுக்கும் தங்களது சொந்த நகரை அடைந்தனர்.

இந்நிலையில் 11-ம் தேதி மாலை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டது.

இந்நிலையில் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி நிறுத்தி வைக்கப்பட்ட தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 ஆட்டங்களும் 6 இடங்களில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மே 29-ம் தேதி முதல் தகுதிச்சுற்று ஆட்டமும், மே 30-ம் தேதி எலிமினேட்டர் ஆட்டமும், ஜூன் 1-ம் தேதி 2-வது தகுதி சுற்று ஆட்டமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகுடம் சூடப்போதுவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.

பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள லீக் ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டும் நடைபெறுகிறது.

Revised IPL schedule

DateTimeMatchVenue
May 177:30 PMRCB vs KKRBengaluru
May 183:30 PMRR vs PBKSJaipur
May 187:30 PMDC vs GTDelhi
May 197:30 PMLSG vs SRHLucknow
May 207:30 PMCSK vs RRDelhi
May 217:30 PMMI vs DCMumbai
May 227:30 PMGT vs LSGAhmedabad
May 237:30 PMRCB vs SRHBengaluru
May 247:30 PMPBKS vs DCJaipur
May 253:30 PMGT vs CSKAhmedabad
May 257:30 PMSRH vs KKRDelhi
May 267:30 PMPBKS vs MIJaipur
May 277:30 PMLSG vs RCBLucknow
May 297:30 PMQualifier 1TBC
May 307:30 PMEliminatorTBC
June 17:30 PMQualifier 2TBC
June 37:30 PMFinalTBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top