பாரா பாட்மிண்டன்: இந்தியா பதக்க வேட்டை

துபாய்

சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்தியா 19 பதக்கங்கள் வென்றது.

6-வது ஃபாஸா பரா பாட்ட்மின்டன் சர்வதேச போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கம் என 19 பதக்கங்கள் வென்றது. சிவராஜன் சோலைமலை, சுதர்சன் சரவணகுமார் முத்துசாமி ஆகியோர் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றனர்.

எஸ்எல் 3 ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் அனுபவம் வாய்ந்த உமேஷ் விக்ரம் வெள்ளிப் பதக்கம் வென்றார். எஸ்யு5 இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹர்திக் மக்கார், ருதிக் ரகுபதி ஜோடி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகர் அரை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top