இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 22-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.
சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் உடன் மோத உள்ளது.
இந்த ஆட்டம் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் சிஎஸ்கே அணி ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் தோனி பேட்டிங் செய்யும் வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில் குட்டி மலிங்கா என அழைக்கப்படும் பத்திரனா வீசிய யார்கர் பந்தை தோனி ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸருக்கு பறக்க விடுகிறார். தோனி அடித்த ஷாட்டையை பார்த்து பதிரானா புன்னகைப்பார்.
சிஎஸ்கே வெளியிட்ட இந்த வீடியோவை 16 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
Super