ஐபிஎல் தொடரில் இம்முறை புதிய சாம்பியன்.. அருண் துமால் !

மும்பை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசன் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. தொடர் பாதிக்கட்டத்தை தாண்டி உள்ள நிலையில் பல்வேறு சுவாரசியமான ஆட்டங்கள் ரசிகர்களை கவர்ந்திழுந்துள்ளன.

தற்போதைய நிலையில் ஆர்சிபி, டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 6 அணிகள் புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் மும்பை, குஜராத் அணிகளை தவிர மற்ற அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது இல்லை.

இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கூறும்போது, “நடப்பு சீசனில் இதற்கு முன்னர் போட்டியை வெல்லாத அணி கோப்பையை வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். டெல்லி கேப்பிடல்ஸ் கடந்த சில ஆண்டுகளில் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் கோப்பையை வென்றது இல்லை. பஞ்சாப் கிங்ஸ் ஒரே ஒரு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆர்சிபி அவ்வப்போது சிறப்பாக செயல்பட்டது. இந்த அணிகளில் சில இறுதிப் போட்டியில் போட்டியிட்டால், ஒரு புதிய சாம்பியனை பெறுவோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top