ஐபிஎல் மீண்டும் தொடங்குவது எப்போது?

இந்தியா, பாகிஸ்தான் போர் ஒப்பந்தம் அறிவிப்பு நேற்று மாலை 5 மணி அளவில் வெளியானது. இதையடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபில் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.

போர் பதற்றம் காரணமாக கடந்த 8ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து தொடரை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் பெரும்பாலானோர் தங்களது நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடு சென்று வீரர்களிடம் அந்தந்த அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கூறும்போது, “போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

உடனடியாக தொடரை தொடங்க முடிந்தால் போட்டி நடைபெறும் இடங்கள், தேதிகள் உட்பட அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும். மேலும், அணி உரிமையாளர்கள், ஒளிப்பரப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி எப்படி முன்னேறுவது என்பது குறித்து ஒரு வழியை கண்டு பிடிக்க வேண்டும்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top