ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

லக்சாய சென் முதல் சுற்றுடன் வெளியேற்றம்

நிங்போ

சீனாவின் நிங்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் மளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.சிந்து, 36-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் நுர்மி திரி வார்டோயோவை எதிர்த்து விளையாடினார். 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற சிந்து 21-15, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், 14-ம் நிலை வீரரான சீன தைபேவின் ஷியா ஹாவோவை எதிர்கொண்டார். இதில் லக்சயா சென் 18-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top