ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, அர்னவ் பாப்பர்கர் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினார்.
மெல்பர்னில் நேற்று நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் மாயா ராஜேஷ்வரன் ரேவதி 4-6, 1-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அன்னா புஷ்கரேவாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
ஆடவர் ஜூனியர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அர்னவ் பாப்பர்கர் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் விஹான் ரெட்டியிடம் வீழ்ந்தார்.

