சென்னை:
இந்தியன் ஆயில் வழங்கும் WTT ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 நிகழ்வு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் கீழ் உள்ள ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. உலகின் சிறந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் 600 புள்ளிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்தத் தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.2.35 கோடியாகும்.
இந்தியன் ஆயில் வழங்கும் WTT ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 நிகழ்வின் 3-வது நாளான இன்று பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் 3-0 (12-10, 11-5 11-5) என்ற செட் கணக்கில் வைல்டு கார்டு வீரரான மால்டாவைச் சேர்ந்த கிம் டேஹ்யுனையும், மானவ் தாக்கர் 3-0 (11-4, 11-7, 11-7) என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரரான திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவாவையும், வைல்டு கார்டு வீரரான இந்தியாவின் மனுஷ் ஷா 3-1 (11-13, 12-10, 13-11, 11-6) என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரரான இத்தாலியின் ஜான் ஓய்போடேவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர். இந்தியாவின் பயாஸ் ஜெயின் 3-1 (11-8, 2-11, 11-8, 11-3) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த சத்தியன் ஞானசேகரனை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி, சகநாட்டைச் சேர்ந்த வைல்டு கார்டு வீராங்கனையான சுதிர்தா முகர்ஜியை எதிர்கொண்டார். 5 செட்கள் வரை சென்ற இந்த ஆட்டத்தில் அய்ஹிகா 3-2 (11-9, 7-11, 11-8, 8-11, 12-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் கால் பதித்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான காவ்யா பாத் 3-1 (11-8, 8-11, 11-6, 11-6) என்ற கணக்கில் ஹாங் காங்கின் வோங் கோய் துங்கை தோற்கடித்தார். ஹாங் காங்கின் ஜு செங்ட்ச்சு 3-0 (11-6, 11-8, 11-6) என்ற செட் கணக்கில் வைல்டு கார்டு வீராங்கனையான கொரியாவின் யோ யெரினை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார்.
சீன தைபேவின் ஹுவாங் யூ-ஜீ 3-0 (11-9, 11-6, 11-7) என்ற செட் கணக்கில் இந்தியாவின் யஷஸ்வினி கோர்படேவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் திவ்யான்ஷி பவுமிக் 3-2 (13-15, 11-9, 9-11, 11-1, 11-6) என்ற செட் கணக்கில் இத்தாலியின் கியோர்கியா பிக்கோலினை வீழ்த்தினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் முதல் நிலை ஜோடியான ஜப்பானின் டோமோகாசு ஹரிமோட்டோ, சோரா மட்சுஷிமா ஜோடி 3-0 (11-7, 11-8, 11-8) என்ற செட் கணக்கில் தகுதி நிலை ஜோடியான இந்தியாவின் அனிர்பன் கோஷ், சார்த் மிஷ்ரா ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தது.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கொரியாவின் லிம் ஜோங் ஹூன், ஜெ ஹயூன் ஜோடி, தமிழ்நாடு வீரர் அபிநந்த் பிரதிவாதி, பிரேயேஷ் சுரேஷ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் கடும் சவால் அளித்த அபிநந்த் ஜோடி ஆட்டத்தை 5 செட் வரை கொண்டு சென்றது. எனினும் கடைசி வரை போராடிய அபிநந்த் ஜோடி 2-3 (10-12, 5-11, 11-7, 11-9, 6-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்தியாவின் சரத் கமல், சினேஹித் சுரவஜ்ஜுலா ஜோடி 3-2 (11-6, 7-11, 13-11, 6-11, 11-9) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவன் நிகோலஸ் லம், பின் லூ ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தது. மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தாக்கர் ஜோடி சகநாட்டைச் சேர்ந்த ஹர்மீத் தேசாய், சத்தியன் ஞானசேகரன் ஜோடியை 3-1 (11-7, 11-9, 7-11, 11-7) என்ற செட் கணகிக்ல வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மகளிர் இரட்டையர் பிரிவில் 3-ம் நிலை ஜோடியான ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ, மியு கிஹரா ஜோடி 3-0 (11-7, 11-8, 11-8) என்ற செட் கணக்கில் வைல்டு கார்டு ஜோடியான இந்தியாவின் சிண்ட்ரெலா தாஸ், சுகானா சைனி ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ, மியு கிகரா ஜோடி 3-0 (11-7, 11-8, 11-8) என்ற செட் கணக்கில் வைல்டு கார்டு ஜோடியான இந்தியாவின் சிண்ட்ரெலா தாஸ், சுகானா சைனி ஜோடியை தோற்கடித்தது.
இந்தியாவின் தியா சித்தலே, யஷஸ்வினி கோர்படே ஜோடி 3-1 (11-8, 5-11, 12-10, 11-5) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த தனிஷா கொடேச்சா, சாயாலி வானி ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. மற்றாரு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சுவாஸ்திகா கோஷ் ஜோடி 3-1 (11-7, 11-13, 11-7, 12-10) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஜோடியை வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் தகுதி நிலை ஜோடியான இந்தியாவின் ஆகாஷ் பால், பொய்மண்டி பாஸ்யா ஜோடி 3-0 (11-6, 11-7, 11-8) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக்கோலஸ் லம், சிங்கப்பூரின் ஜெங் ஜியான் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானின் மகரு யோஷிமுரா, ஓடோ சட்சுகி ஜோடி 3-0 (11-6, 11-2, 11-8) என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யஷஸ்வினி கோர்படே ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சித்தலே ஜோடி 3-0 (11-4, 12-10, 11-7) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த அங்கூர் பட்டாச்சார்யா, அய்ஹிகா முகர்ஜி ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு இந்திய ஜோடியான மானவ் தாக்கர், மணிகா பத்ரா ஜோடி 0-3 (9-11, 2-11, 8-11) என்ற கணக்கில் கணக்கில் ஜப்பானின் சோராமட்சுசிமா, மிவா ஹரிமோட்டோ ஜோடியிடம் தோல்வி அடைந்தது.