Tri series

கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்தை நெருங்கும் இந்தியா

துபாய்

மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி, இங்கிலாந்தை நெருங்கி உள்ளது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற 3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி 8 புள்ளிகள் கூடுதலாக பெற்று 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்துக்கு நெருக்கமாக உள்ளது.

இந்தியா 121 ரேட்டிங் புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் இங்கிலாந்து 127 ரேட்டிங் புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலிய அணி 167 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. நியூஸிலாந்து (96), தென் ஆப்பிரிக்கா (90), இலங்கை (82) ஆகிய அணிகள் முறையே 4 முதல் 6-வது இடங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top