hockey pro

புரோ லீக் ஹாக்கியில் இந்திய அணி தோல்வி

ஆம்ஸ்டெல்வீன்

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் புரோ லீக் தொடரில் இந்திய அணி நேற்று ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்துடன் மோதியது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் 20-வது நிமிடத்தில் ஜுக்ராஜ் சிங்கும், 54-வது நிமிடத்தில் அபிஷேக்கும் கோல் அடித்தனர். நெதர்லாந்து அணி சார்பில் ஜான்சன் ஜிப் 57-வது நிமிடத்திலும், திஜ்ஸ் வான் டேம் 24-வது நிமிடத்திலும், டிஜெப் ஹோடெமேக்கர்ஸ் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்திலும் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் வீழ்ந்திருந்தது. இந்திய அணி தனது ஆட்டத்தில் நாளை (ஜூன் 11) அர்ஜெண்டினாவுடன் மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top