தங்கம் வென்றார் விஜய்வீர் சித்து !

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல், ஆர்யா போர்ஸ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்திய ஜோடி தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில், சீனாவின் ஸிபெய் வாங், பூஹான் சாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய ஜோடி 9 புள்ளிகள் சேர்த்து 2-வது இடம் பிடித்தது. சீன ஜோடி 17 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது.

This image has an empty alt attribute; its file name is Vijayveer-Sidhu-1.jpeg
விஜய்வீர் சித்து

ஆடவருக்கான 25 மீட்டர் ரேப்பிடு ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் விஜய்வீர் சித்து தங்கப் பதக்கம் வென்றார். இறுதி சுற்றில் விஜய்வீர் சித் 29 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். இத்தாலியின் ரிக்கார்டோ மஸாட்டி 28 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். சீனாவின் யங் யுஹாவோ வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இபோன்று மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் பிரிவில் இந்தியாவின் சுருச்சி சிங் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top