துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளி வென்றார் அர்ஜுன் பபுதா

லிமா

பெரு நாட்டின் லிமா நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் 0.1 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்க பதக்கத்தை இழந்தார்  இந்தியாவின் அர்ஜுன் பபுதா. அவர் 252.3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.  ஒலிம்பிக் சாம்பியனும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனை தன்வசம் வைத்துள்ள சீனாவின் ஷெங் லிஹாவோ 252.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தங்க பதக்கம் வென்றார். ஹங்கேரி வீரர் இஷ்த்வான் பெனி 3-வது இடமும் பிடித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top