புதுடெல்லி
இந்தியா, உருகுவே, அர்ஜெண்டினா, சிலி ஆகிய 4 நாடுகள் கலந்து கொண்டுள்ள மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடர் அர்ஜெண்டினாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்திய அணி, சிலியுடன் மோதியது. இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இந்திய அணி தரப்பில் சுக்வீர் கவுர் (35-வது நிமிடம்), கனிகா சிவாச் (47-வது நிமிடம்) ஆகியோர் ஒரு கோல் அடித்தனர். சிலி அணி சார்பில் ஜெசிந்தா சோலாரி (27-வது நிமிடம்), கேப்டன் லாரா முல்லர் (42-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி ஷூட் அவுட்டில் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜூன் 1-ம் தேதி உருகுவேயுடன் மோதுகிறது.