ஜூன் 4-ல் இந்தியா – தாய்லாந்து கால்பந்து அணிகள் மோதல்

புதுடெல்லி

இந்திய ஆடவர் கால்பந்து அணி வரும் ஜூன் 4-ம் தேதி தாய்லாந்துக்கு எதிராக சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) நேற்று அறிவித்தது.

‘ப்ளூ டைகர்ஸ்’ என அழைக்கப்படும் இந்திய கால்பந்து அணி தற்போது ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தகுதிச் சுற்று இறுதிகட்ட போட்டியில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரில் வரும் ஜூன் 10-ம் தேதி ஹாங் காங்குடன் இந்திய அணி மோத உள்ளது. இந்த ஆட்டத்துக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக தாய்லாந்து அணிக்கு எதிரான நட்புரீதியிலான ஆட்டம் உதவக்கூடும்.

இந்தியா – தாய்லாந்து அணிகள் மோதும் போட்டியானது தாய்லாந்தின் ரங்சித் நகரில் உள்ள தம்மாசாட் ஸ்டேடியத்தில் ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. ஃபிபா தரவரிசை பட்டியலில் இந்தியா 127-வது இடத்திலும், தாய்லாந்து 99-வது இடத்திலும் உள்ளன.

இதுவரை இந்தியா, தாய்லாந்து அணிகள் 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் தாய்லாந்து அணி 12 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 7 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top