இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஐசிசி டி 20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த தொடர் நடைபெறுகிறது.
ஒருநாள் போட்டித் தொடர் ஜனவரி 11-ம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி 21-ம் தேதி டி 20 தொடர் நடைபெறுகிறது. பரோடா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகளும், நாக்பூர், ராய்ப்பூர், குவாஹாட்டி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் டி 20 ஆட்டங்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து போட்டி அட்டவணை
தேதி | போட்டி | இடம் |
11 ஜனவரி | முதல் ஒருநாள் போட்டி | பரோடா |
14 ஜனவரி | 2-வது ஒருநாள் போட்டி | ராஜ்கோட் |
18 ஜனவரி | 3-வது ஒருநாள் போட்டி | இந்தூர் |
21ஜனவரி | முதல் டி 20 போட்டி | நாக்பூர் |
23 ஜனவரி | 2-வது டி 20 போட்டி | ராய்ப்பூர் |
25 ஜனவரி | 3-வது டி 20 போட்டி | குவாஹாட்டி |
28 ஜனவரி | 4-வது டி 20 போட்டி | விசாகப்பட்டினம் |
31 ஜனவரி | 5-வது டி 20 போட்டி | திருவனந்தபுரம் |