MI celebration

ஹாட்ரிக் ரன் அவுட்டால் கவிழ்ந்த கேப்பிடல்ஸ்!

கருண் நாயர் விளாசல் வேஸ்ட்

டெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், தொடர்ச்சியாக 3 பந்தில் 3 வீரர்கள் ரன் அவுட்டானதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் முதல் தோல்வியைத் தழுவியது.   

அருண் ஜெட்லி அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது.

MI celebration

திலக் வர்மா 59 ரன் (33 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ரிக்கெல்டன் 41 (25 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), சூரியகுமார் 40 ரன் (28 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித் ஷர்மா 18, கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய நமன் திர் 38 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), வில் ஜாக்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் தலா 2, முகேஷ் குமார் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 20 ஓவரில் 206 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ், பிரேசர் மெக்கர்க் கோல்டன் டக் அவுட்டானதால் அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. எனினும், அபிஷேக் போரெல் – கருண் நாயர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 61 பந்தில் 119 ரன் சேர்க்க, டெல்லி எளிதாக வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 89 ரன் (40 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி சாண்ட்னர் சுழலில் கிளீன் போல்டானார். கே.எல்.ராகுல் 15, அக்சர் 9, ஸ்டப்ஸ் 1, விப்ராஜ் 14 ரன்னில் அவுட்டாகி அணிவகுத்தனர்.

Karun Nair

ஆனாலும், கடைசி 9 பந்தில் 15 ரன் மட்டுமே தேவைப்பட்டதால் டெல்லி வெற்றி உறுதி என்றே தோன்றியது. இந்த நிலையில், பும்ரா வீசிய 19வது ஓவரின் கடைசி 3 பந்தில் அசுதோஷ் ஷர்மா (17 ரன்), குல்தீப் யாதவ் (1), மோகித் ஷர்மா (0) ஆகியோர் அடுத்தடுத்து ரன் அவுட்டாகி தோல்வியை ’இறுக்கி அணைத்து உம்ம’ தர… டெல்லி கேப்பிடல்ஸ் அணி நடப்பு சீசனில் முதல் முறையாக வெற்றி வாய்ப்பை வீணடித்தது!

கேப்பிடல்ஸ் 19 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 12 ரன் வித்தியாசத்தில் முட்டாள்தனமாக தோற்றது. நம்ப முடியாத வகையில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 2 புள்ளிகள் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினர். மும்பை பந்துவீச்சில் கர்ண் ஷர்மா 3, சாண்ட்னர் 2, பும்ரா, தீபக் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கர்ண் ஷர்மா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top