Gukesh

நார்வே செஸில் குகேஷுக்கு முதல் வெற்றி

ஸ்டாவஞ்சர்

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் முதல் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வி அடைந்திருந்தார். தொடர்ந்து 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியிடம் வீழ்ந்திருந்தார்.

இந்நிலையில் குகேஷ் 3-வது சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரும் உலகின் 2-ம் நிலை வீரருமான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 42-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். குகேஷுக்கு நேற்று 19-வது பிறந்த நாளாகும். பிறந்த நாளில் அவர், வெற்றிப் பாதைக்கு திரும்பியது சிறப்பானதாக அமைந்திருந்தது.

அர்ஜூன் எரிகைசி, அமெரிக்காவின் பேபியானோ கருனாவிடம் தோல்வி அடைந்தார். நடப்பு சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், அர்மகேடான் டை பிரேக்கரில் சீனாவின் வெயி யிடம் வீழ்ந்தார்.

3 சுற்றுகளின் முடிவில் பேபியானோ கருனா 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். கார்ல்சல் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அர்ஜூன் எரிகைசி, ஹிகாரு நகமுரா 4.6 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். குகேஷ் 3 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் வெய் யி 2.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top