ஜெயசூர்யா, ரோஹித் வரிசையில் சாய் கிஷோர் !

அகமதாபாத்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அபிஷேக் போரெல் 18, கருண் நாயர் 31, கே.எல்.ராகுல் 28, அக்சர் படேல் 39, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31, அஷுதோஷ் சர்மா 37 ரன்கள் சேர்த்தனர்.

இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரை குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் வீசினார். அதற்கு முன்னர், அவர் பந்துவீச அழைக்கப்படவில்லை. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் கடைசி ஓவரில் பந்துவீச அறிமுகப்படுத்தப்பட்ட சுழற்பந்து வீச்சாளர்களின் வரிசையில் சனத் ஜெயசூர்யா, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3-வது வீரராக சாய் கிஷோர் இணைந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top