அவசரமாக புறப்பட்டார் காகிசோ ரபாடா

பெங்களூரு

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2ம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ரபாடா களமிறங்கவில்லை. இந்த நிலையில் அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பி உள்ளதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர் எப்போது அணியில் மீண்டும் இணைவார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி உள்ள ரபாடா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top