ஐசிசி ஆடவருக்கான 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் அமெரிக்கா அணி குறித்த ஓர் பார்வை..
2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் தனது சொந்த மண்ணில் அமெரிக்க அணி கவனத்தை ஈர்க்கும் வகையிலான செயல் திறனை வெளிப்படுத்தி இருந்தது. அதை தற்போது வெளிநாட்டு மண்ணிலும் நிரூபித்துக் காட்ட முயற்சிக்கக்கூடும். கடந்த முறை கனடா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அமெரிக்க அணி லீக் சுற்றில் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றில் கால்பதித்து இருந்தது. ஆனால் அந்த சுற்றில் அந்த அணி 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது.
அதன் பின்னர் அமெரிக்க அணி வட அமெரிக்கா டி 20 கோப்பையில் கனடா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஓமன் அணிக்கு எதிரான இருதரப்பு டி 20 தொடரை 3-0 என வென்று அசத்தியிருந்தது. கடந்த முறை போன்று இம்முறையும் மோனக் படேல் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மோனக் படேல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அரை சதம் அடித்து கவனம் ஈர்த்திருந்தார்.
ஐசிசி டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள சைதேஜா முக்கமல்லா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 21 வயதான அவர், சர்வதேச டி 20 மற்றும் ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ளார். டி 20 போட்டிகளில் அவரது சராசரி 42.60 ஆக உள்ளது.
அணி விவரம்:
மோனாங்க் படேல் (கேட்ச்), ஜெஸ்ஸி சிங், ஆண்ட்ரீஸ் கௌஸ், ஷெஹான் ஜெயசூர்யா, மிலிந்த் குமார், ஷயன் ஜஹாங்கீர், சைதேஜா முக்காமலா, சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹர்மீத் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே, ஷாட்லி வான் ஷால்க்விக், சவுரப் நேத்ரவல்கர், அலி கான், முகமது மொஹ்சின், சுபம் ரஞ்சனே.
மோதல் விவரம்:


