ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இரு முறை சாம்பியன்களான மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துடன் இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து அணி குறித்த ஒரு பார்வை…
2010 மற்றும் 2022 சாம்பியனான இங்கிலாந்து 3-வது முறையாக கோப்பையை வெல்லும் நோக்கத்தில் களமிறங்குகிறது. கடந்த ஆண்டு ஜோஸ் பட்லருக்குப் பதிலாக ஒருநாள் போட்டி மற்றும் டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் பொறுப்பேற்றார். அவர், ஐசிசி தொடரில் முதன்முறையாக கேப்டனாக செயல்பட உள்ளார்.
டி 20 உலகக் கோப்பை தொடரில் ஹாரி புரூக், மட்டை வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். பேட்டிங்கில் டாப் ஆர்டரில் ஜாஸ் பட்லர், பில் சால்ட், பென் டக்கெட் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். நடுவரிசையில் டாம் பேன்டன், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள்.
பலவீனம் என்று பார்த்தால் பந்துவீச்சில் காயம் காரணமாக மார்க் வுட் இடம்பெறாததுதான். மேலும் ஜோப்ரா ஆர்ச்சர் தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். எனினும் ஜோஷ் டங்க் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். லூக் வுட், சேம் கரண், ஜேமி ஓவர்டன் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் உறுதுணையாக செயல்படக்கூடும். சுழற்பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த ஆதில் ரஷித் பலம் சேர்க்கக்கூடும். லியாம் டாவ்சன், வில் ஜேக்ஸ், ரேஹான் அகமது ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டி 20 தொடரை இங்கிலாந்து அணி வென்றிருந்தது. மேலும் 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடர்களில் இங்கிலாந்து அணி ஒரே ஒரு தொடரை மட்டுமே இழந்துள்ளது.
அணி விவரம்:
ஹாரி புரூக் (கேப்டன்), பென் டக்கெட், ஜாஸ் பட்லர், பில் சால்ட், டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், சாம் கரண், ஆதில் ரஷித், ரேஹான் அகமது, லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங்க், லூக் வுட்.
மோதல் விவரம்:


