‘கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனியே எனக்கு தந்தை‘

சென்னை

இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் எம்.எஸ்.தோனியை புகழாத வீரர்களே இல்லை. இந்திய அணியில் விளையாடிய இளம் வீரர்களும் சரி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய உள்ளூர், சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் சரி தோனி இல்லாமல் நாங்கள் இல்லை.. அவர்தான் எங்களை செதுக்கினார், உருவாக்கினார் என புகழாரம் சூட்டுவது புதிது ஒன்றும் இல்லை. இந்த வரிசையில் தற்போது இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவும் இணைந்துள்ளார். கடந்த சில சீசன்களாக அவர், ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.

இறுதிக்கட்ட ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் பயணத்தை சிஎஸ்கே சிறிய ஆவணப்படமாக தொகுத்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பதிரானா கூறும்போது, “தோனி எனது தந்தையைப் போன்றவர், ஏனென்றால் நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது அவர் எனக்கு ஆலோசனைகள் வழங்கி ஆதரவு கொடுக்கிறார் மற்றும் வழிகாட்டுகிறார். இது என் தந்தை என் வீட்டில் செய்ததைப் போன்றது. அதனால்தான் தோனியை எனது கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்” எனக் கூறி மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top