arjun

அர்ஜுன் எரிகைசி டாப் 10 இடத்தை இழந்தார்

டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ் தொடர் நெதர்லாந்​தின் விஜ்க் ஆன் ஸீ நகரில் நடை​பெற்று வந்​தது. இந்​தத் தொடரின் கடைசி மற்​றும் 13-வது சுற்று நேற்று நடை​பெற்​றது. இதில் உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசட்​டோரோவ், இந்திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்ஜுன் எரி​கைசியை வீழ்த்​தி​னார். இதன் மூலம் 9 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து நோடிர்​பெக் அப்​துசட்​டோரோவ் சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ் தனது கடைசி சுற்​றில் ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமருடன் டிரா செய்​தார். இதன் மூலம் குகேஷ் 6.5 புள்​ளி​களு​டன் 8-வது இடத்தை நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி, சுலோவேனி​யா​வின் விளாடிமிர் ஃபெடோசீவ் ஆகியோ​ருடன் பகிர்ந்து கொண்​டார்.

ஆர்.பிரக்​ஞானந்தா 5.5 புள்​ளி​களு​டன் 11-வது இடத்​தை​யும், அர்​ஜுன் எரி​கைசி, அரவிந்த் சிதம்​பரம் ஆகியோர் தலா 4.5 புள்​ளி​களு​டன் முறையே 12, 13-வது இடத்​தை​யும் பிடித்து ஏமாற்​றம் அளித்​தனர். இந்த தொடரில் வெளிப்​படுத்​திய மோச​மான செயல் திற​னால் குகேஷ், லைவ் ரேட்​டிங்​கில் 5.8 புள்​ளி​களை இழந்து 2748.2 புள்​ளி​களு​டன் தரவரிசை​யில் 10-வது இடத்​தில் உள்​ளார்.

அதேவேளை​யில் அர்​ஜுன் எரி​கைசி 7 இடங்​களை இழந்து 2745.1 புள்​ளி​களு​டன் 12-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார். பிரக்​ஞானந்தா 6 இடங்​களை இழந்து 2741.2 புள்​ளி​களு​டன் 14-வது இடத்​தில்​ உள்​ளார்​.

4 thoughts on “அர்ஜுன் எரிகைசி டாப் 10 இடத்தை இழந்தார்”

  1. Best platform I’ve used in the Philippines so far. The games are exciting and it feels very fair. Highly recommend giving phjljl2 a try if you love winning.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top