ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் பன்னிரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடை பெற்றது.
சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் ஆர்.எம் கே. பாடசாலா பள்ளியில் 12-ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆர்.எம்.கே. கல்விக் குழும தலைவர் வித்யா ரத்னா ஆர். எஸ் .முனிரத்தினம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.எம். கிஷோர், செயலாளர் எலமஞ்சி பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் சந்திரிகா பிரசாத் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில், சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியக மண்டல இயக்குநர் சுகுணா சிங், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சுகுணா சிங் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த பரிசையும் ரிக் அணி தட்டிச்சென்று சென்று முதலிடம் பிடித்தது. விழாவில் கல்வி குழுமத்தின் ஆலோசகர்கள் எம்.எஸ். பழனிச்சாமி, வி.மனோகரன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.


Really liking the variety of options here. It is easy to navigate and the customer support team is actually helpful and responsive. Five stars! 688jilicomlogin
The sign-up process was super easy. I was able to start playing in minutes thanks to jili98loginregister.
Really impressed with the variety of games available. It feels very professional and user friendly. Give jljl555 a try if you want some real fun.