Alcaraz

இத்தாலி ஓபனில் அல்கராஸ் சாம்பியன்

ரோம்

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னரை எதிர்த்து விளையாடினார்.

ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 புள்ளிகள் கொண்ட தொடரை அல்கராஸ் வெல்வது இது 7-வது முறையாகும். அதேவேளையில் ஜன்னிக் சின்னரின் தொடர்ச்சியாக 26 வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார் அல்கராஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top